தமிழ் சினிமாவின் இளம் காதலர்கள் என அழைக்கப்பட்ட ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியினரின் தனிப்பட்ட வாழ்க்கை சமீபத்தில் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்திய சமூக வலைத்தள வாசகர்களுக்கு நடிகை திவ்ய பாரதி தற்பொழுது நேரடியாக பதிலளித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இசைத்தளத்தை உருவாக்கியவர். இதனை அடுத்து நடிகராகவும் இடம்பிடித்த அவர், பாடகி சைந்தவியைக் காதலித்து, 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினரின் உறவு கடந்த பத்தாண்டுகளாக பலரது மனங்களையும் கவர்ந்திருந்தது.
ஜி.வி. பிரகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு உருக்கமான பதிவினை வெளியிட்டிருந்தார்.அதில், “நான் சைந்தவியுடன் கடந்த சில மாதங்களாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றேன். இது ஒருவரையொருவர் விரும்பி எடுத்த முடிவு. தயவுசெய்து தனிமனித வாழ்க்கையை மதியுங்கள்” என தெரிவித்தார்.
இந்நிலையில், அவர்களின் பிரிவுக்குக் காரணமாக வேறு யாராவது உள்ளார்களா? என்ற கேள்வியும் வதந்திகளாக சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது. சிலர் அதற்கு ‘திவ்ய பாரதி தான் இந்த தம்பதியரின் பிரிவுக்கு காரணம் எனவும் கூறியுள்ளனர்.
இதற்கு ஏற்றவகையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலினையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சமீப நாட்களாக எனது பெயரை இழுத்துக் கூறும் வதந்திகள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உண்மையில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பிரிவிற்கும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை" எனக் கூறியுள்ளார்.
Listen News!