• Apr 03 2025

அழகென்றால் இவள் தானே...கண்ணுக்கு விருந்தளிக்கும் ரச்சிதா மகாலட்சுமி...!

subiththira / 23 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையின் பிரபலமானவரும் சினிமாவில் தன்னை நிலை நாட்டிக் கொண்ட முன்னணி நடிகையுமான ரச்சிதா மகாலட்சுமி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் அவர் சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு தனது செல்லப் பூனையையும் கையில் வைத்துக் கொண்டிருக்கின்றார்.


ரச்சிதா மகாலட்சுமி தமிழ் மற்றும் கன்னடத் தொலைக்காட்சி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை. அவர் தனது நடிப்புத் திறமையை சீரியல் மூலம் ஆரம்பித்தார். 'சரவணன் மீனாட்சி' என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.

இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டு அதிகளவான ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார். அந்நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய உணர்வுகள், நேர்மையான பேச்சுகள் போன்றவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரச்சிதா மகாலட்சுமி தனது கவனத்தை திரையுலகை நோக்கித் திருப்பினார். 'பயர்' திரைப்படம் அவர் வாழ்க்கைக்கு முக்கிய திருப்புமுனையாக காணப்பட்டது. அந்தப் படத்தில் அவரது இயல்பான நடிப்பு மற்றும் ஸ்டைல் என்பன அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டன.

இந்த நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு அழகிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அப்படத்தில் அவர் மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் காணப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த வயசிலும் இப்படி ஒரு அழகா இருக்காங்களே..! என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement