தெலுங்கு சினிமாவின் புகழ் பெற்ற தென்னிந்திய நடிகராக விஜய் தேவரகொண்டா விளங்குகின்றார். இவரது நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, நடிகையர் திலகம் மற்றும் கீதா கோவிந்தம் போன்ற படங்கள் தெலுங்கில் அதிகளவான வசூலை பெற்றுக் கொடுத்தது.
இவரது நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான படமே லைகர். அந்தப் படம் தொடர்பான சர்ச்சை தற்போது வெளியாகி உள்ளது. லைகர் படத்தில் நடிக்கும் போது நடிகை அனன்யா மிகவும் சங்கடப்பட்டுள்ளதாக அந்நடிகையின் தந்தையும் நடிகருமான சங்கி பாண்டி சமூக ஊடகங்களில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில் , லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர்.
இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களையும் பெற்று இருந்தது. இந்தப் படம் நடிக்கும் போது அனன்யாவிற்கு 23 வயது தான் எனவும் அந்தப் படம் தனது வயதிற்கு ஏற்ற காரெக்டர் இல்லை என அனன்யா பல முறை படக்குழுவிடம் கூறியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Listen News!