சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், செல்வம் முத்துவுக்கு போன் பண்ணி தன்னை அருண் பிடித்து விட்டதாக சொல்லுகின்றார். மேலும் நாங்க ஹோட்டலில் செய்த பிரச்சனையை ஞாபகம் வைத்து தான் அவர் தன்னை பிடித்ததாக சொல்கின்றார்.
இன்னொரு பக்கம் சீதா, அருணின் அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்கிறார். அவர் தனது அம்மாவை கவனிப்பை பார்த்து அருணும் மகிழ்ச்சி அடைகின்றார். மேலும் அந்த நேரத்தில் மீனா போன் பண்ணி சீதாவிடம் மண்டப ஆர்டருக்கு வரவேண்டும் என சொல்ல, அவரும் லீவு போட்டு வருவதாக சொல்லுகின்றார்.
இதன் போது மீனாவும் அருணின் அம்மாவுடன் கதைக்கின்றார். அதற்கு அருணின் அம்மா சீதா ரொம்ப நல்ல பொண்ணு என புகழ்ந்து தள்ளுகின்றார்.
இதை தொடர்ந்து விஜயாவுக்கு போன் பண்ணிய சிந்தாமணி இன்றைய தேதி ஞாபகம் இருக்கு தானே, மீனா மண்டபத்துக்கு போக கூடாது என்று சொல்லுகின்றார். அதற்கு விஜயா நான் அதை பார்த்துக் கொள்கிறேன் என சொல்லுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே போக வேண்டும் என்று அவசர அவசரமாக அனைவரையும் அனுப்பி வைக்கின்றார்.
இறுதியில் எல்லாரும் வீட்டை விட்டு கிளம்பிய பின்பு எப்படி நாடகத்தை ஆரம்பிப்பது என யோசித்து தனக்கு கை இழுத்து விட்டதாக கத்துகின்றார். அதனை நம்பிய மீனா தான் அவருக்கு போன் பண்ணுவதாக சொல்லவும் வேண்டாம் இதற்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் காணும் என்று தன்னை ரூமில் இருக்க வைக்க சொல்லுகிறார்.
அது மட்டும் இல்லாமல் சுடுதண்ணி ஒத்தடமும், ஐஸ் ஒத்தடமும் சாயம் காலம் வரை மாறி மாறி கொடுக்க வேண்டும் என்று சொல்ல, சாயும் காலம் மட்டுமா? எனக்கு மண்டப ஆர்டர் இருக்கு என்று சொல்லுகின்றார் மீனா. இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!