தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவரே அஜித் குமார். இவர் தனது எதார்த்த நடிப்பால் பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர். இவருக்கு தென்னிந்தியாவில் அதிகளவான ரசிக பட்டாளங்கள் காணப்படுகின்றனர்.
குறிப்பாக , இவரது நடிப்பில் வெளியான காதல் கோட்டை , வில்லன் , வாலி, மங்காத்தா மற்றும் வரலாறு போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பை பெற்றிருந்தது. அத்துடன் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படமே விடாமுயற்சி. இந்தப் படம் வெளியாகி ஒரு நாளிலேயே அதிகளவான வசூலையும் பெற்று வருகின்றது.
மேலும் சமீபத்தில் அஜித் கார் ரேஸ் ஒன்றில் பங்கு பெற்றி பத்மபூசன் விருதினை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருந்தார். இந்நிலையில் தற்போது அஜித் பற்றிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. அதில் அடுத்த கார் ரேஸில் பங்குபற்ற அஜித் தயாராகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜித்தின் ரசிகர்கள் இப்பொழுது தான் படத்தை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ அவர்களை இன்னும் சந்தோசப்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.
Listen News!