• Feb 23 2025

எம்.எஸ்.விஸ்வநாதன் மகளுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானமா? அப்படி என்ன தொழில் செய்கிறார்?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

 எம் எஸ் விஸ்வநாதன் மகள் லதா  மோகன் என்பவர் வருடத்திற்கு அழகு கலையில் மட்டும் 100 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பிரபல இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன்  ஆரம்பத்தில் 100 ரூபாய்க்கும் குறைவாக  சம்பளம் வாங்கி ஒரு படத்திற்கு இசையமைத்து கொடுத்ததாக தகவல் உண்டு. ஆனால் இன்று அவரது மகள் லதா மோகன் என்பவர் ’ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் அழகு நிலையங்களை இந்தியா முழுவதும் பல கிளைகள் தொடங்கி 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது. 



லதா மோகன் தனது தொழில் குறித்து கூறுகையில் ’அழகு கலையில் நான் மிகுந்த ஆர்வமாக இருந்ததால் இதை பிசினஸ் ஆக செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் அப்பா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று கூறினார். ஆனால் நான் இதை ஒரு சவாலாக எடுத்து கன்யா என்ற பெயரில் முதல் அழகு நிலையத்தை தொடங்கினேன் 

நடிகை ஸ்ரீபிரியா எனது தோழி என்பதால் அவர் தான் என்னுடைய முதல் அழகு நிலையத்தை தொடங்கி வைத்தார். என்னுடைய ராசியான அம்மா எனது கல்லாப்பெட்டியில் முதல் ரூபாயை போட்டு தந்தார். ஆரம்பத்தில் நான் சவால்கள் மற்றும் சிரமங்களை சந்தித்தாலும் என் அப்பா கூறிய அறிவுரைகளை கடைப்பிடித்தேன். வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாது, தொழிலில் நேர்மை இருக்க வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரையை கடைபிடித்து வந்ததால் இன்று வெற்றிகரமான தொழிலதிபராகியுள்ளேன். இன்று எங்களுக்கு நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது, எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்று உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 

Advertisement

Advertisement