• Dec 04 2024

"நடிகர் விஜய் 32" .....! இறுதிவரை நிறைவேறாத தளபதியின் ஒரே ஆசை!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

18 ஆவது வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஜய். சினிமாவில் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு சிறு வயது முதலே இருந்து வந்தது. இந்த ஆசையை தன் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரிடம் கூறியுள்ளார் விஜய்.


முதலில் இதற்கு சம்மதம் தெரிவிக்காத எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யின் பிடிவாதம் காரணமாக அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தார். முதல் படத்துக்கே கடுமையான விமர்சனங்கள். ஆனால் அதற்க்கு எல்லாம் அசராமல் கடுமையான உழைப்பும், சினிமாவில் ஒரு பெரிய நடிகராகவேண்டும் என்ற வெறியும் அவரை தற்போது நம்பர் ஒன் டாப் பொஷிஷனில் வைத்துள்ளது.


விஜய்யிடம் அந்த உழைப்பையும் வெறியையும் பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர் கண்டிப்பாக தன் மகன் திரையுலகில் மிகப்பெரிய இடத்திற்கு வருவார் என கணித்தார். அவரின் கணிப்பு துளி கூட பொய்யாகவில்லை.  விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலக இருக்கின்றார். அரசியலில் முழுமையாக களமிறங்க இருப்பதால் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துவிட்டார்.

d_i_a

இந்த 32 ஆண்டுகளில் விஜய்யின் ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறவே இல்லையாம். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் அவதாரம் எடுக்கவேண்டும் என நினைத்தாராம். அது நடைபெறவில்லை. தற்போது மக்களுக்கு பனி செய்ய அரசியலில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில் தளபதி 32 திரைத்துறை வருகையை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

Advertisement

Advertisement