• Jan 19 2025

மீண்டும் கஜினியாக மாறும் நடிகர் சூர்யா! அதிரடியாய் வந்த அப்டேட்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த 2005 ஆம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியானது ‘கஜினி’. இதில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்றளவும் சூர்யாவின் வெற்றி படங்களில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது ‘கஜினி’.


இதை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு, ஹிந்தியில் கஜினி படம் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில், அமீரகான் நடித்து சூப்பர்ஹிட் ஆனது. இந்த நிலையில் இதன் பார்ட் 2-க்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.


ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றினை இயக்கி வருகிறார். இதனையடுத்து சல்மான் கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் சூர்யா அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறார். இதற்க்கு பின் கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகுமாம்.


தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு முருகதாஸ் மற்றும் சூர்யா காம்போ இணையுள்ளது. இதில் ஹயிலைட் என்னவென்றால், ‘கஜினி 2’ படத்தில் சூர்யா, அமீர்கான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement