• Feb 22 2025

மாமியார் கனவை நிறைவேற்றிய மருமகள்... குஷ்புவின் செயலால் மகிழ்ந்த நடிகர் சுந்தரசியின் தாயார்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முக்கிய ஹீரோகளுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார். இவர் தற்போது தனது மாமியாரின் கனவை நிறைவேற்றியுள்ளார்.


தற்போது குணச்சித்திர ரோல்களில் படங்களில் நடித்து வரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணயத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.


தற்போது சுந்தர் சியின் அம்மா தெய்வானை சிதம்பரம் பிள்ளையின் கனவை குஷ்பு நிறைவேற்றி வைத்திருக்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று தான் அவர் ஆசைப்பட்டாராம். அதனால் அவரை மோடியிடம் அழைத்து சென்று இருக்கிறார் குஷ்பு. சந்திக்க ஒப்புகொண்டதற்காக பிரதமருக்கு குஷ்பு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அப்போது அவரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக்கொண்டார் பிரதமர் மோடி. 


Advertisement

Advertisement