• Apr 01 2023

நடிகர் ராம் சரண் மனைவியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா...சொக்கிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

டோலிவுட் மெகாஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தந்தை வழியில் நடிகராகிவிட்டார். மேலும் அவர் அப்பல்லோ மருத்துவமனையின் துணை நிறுவனரும், சேர்மனுமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தியான உபாசனா கமினேனியை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உபாசனா தற்போது கர்ப்பமாக  உள்ளார்.

அத்தோடு ராம் சரணின் கெரியருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் உபாசனா. அப்பல்லோ மருத்துவமனைகளில் வேலை செய்து வரும் உபாசனாவுக்கு ஆதரவாக இருக்கிறார் ராம் சரண். குடும்ப சொத்துக்கள் தவிர்த்து ராம் சரண், உபாசனாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 2 ஆயிரத்து 500 கோடியாகும். அத்தோடு இந்தியாவின் வெற்றிகரமான தம்பதிகளில் ராம் சரண், உபாசனா தம்பதியும் ஒன்று.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்த 95வது ஆஸ்கர் விருது விழாவில் ராம் சரண் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பட பாடல் நாட்டு நாட்டு ஆகும். ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகை லாரன் காட்லீப் மற்றும் கலைஞர்கள் டான்ஸ் ஆடினார்கள். அதை பார்த்து அரங்கமே அதிர்ந்தது. அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

ஆஸ்கர் விருது விழாவுக்கு கவுன் அணியாமல் பட்டுச் சேலை அணிந்திருந்தார் உபாசனா. அத்தோடு அவர் மட்டும் அல்ல ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்ட ராஜமவுலியின் மனைவி ரமாவும் புடவையில் அழகாக வந்திருந்தார். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ராஜமவுலி ஆகியோர் கோட், சூட் அணியாமல் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருதுக்கு முன்பு நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அத்தோடு உலக அரங்கில் இந்தியர்களை பெருமை அடைய வைத்த ஆர்.ஆர். ஆர். படக்குழுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் பெருமை அடைந்திருக்கிறார்கள். தங்கள் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு ஆஸ்கர் கிடைத்ததை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement