• Mar 23 2023

7 ஆஸ்கார் விருதுகளை பெற்ற எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" திரைப்படம்- ரசிகர்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!

95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஆஸ்கர் விருதினை வழங்குபவர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

இதில் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படம் 7 ஆஸ்கர் விருதை வென்று உலகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தன் பக்கம் திருப்பி உள்ளது. அதன்படி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை படத்தில் நடித்த மைக்கேல் யோவ் வென்றுள்ளார்.


டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இருவரும் சிறந்த இயக்குநர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பால் ரோஜர்ஸ் பெற்றுள்ளார். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகளை வென்று 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது.


"எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்" திரைப்படம் 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், 7 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளதற்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆஸ்கர் விருதுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது விழாவில் "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement