• Jul 16 2025

லப்பர் பந்து ஹீரோயினை புகழ்ந்த நடிகர் பார்த்திபன்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

'லப்பர் பந்து' படத்தில் முக்கிய கதாபாத்திரம் வகித்துள்ள ஸ்வாசிகா குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் ஆர். பார்த்திபன் அளித்த உருக்கமான உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் அவர் "லப்பர் பந்து' படத்தில் நடித்த ஸ்வாசிகா ஒரு 13 வருஷத்துக்கு முன்னாடி நடிப்பதற்காக முயற்சி பண்ணும் போது என்னை வந்து சந்திச்சாங்க. அப்போ நான் ஆடிஷன் பண்ணிட்டு ஏதாவது வாய்ப்பு வந்தா சொல்றேன் என்று சொல்லிட்டேன். இந்த படம் பார்த்துட்டு அவர்களை தேடி கண்டுபிடித்து வாழ்த்தும் போது, சார் என்னை ஞாபகம் இல்லையா அப்போ நீங்க எனக்கு சொல்லிக் கொடுத்த டயலாக் கூட இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு என்று சொன்னாங்க. கடந்த 13 வருஷமாக அந்த பொண்ணோட வாழ்க்கையில கொஞ்சம் கூட தளர்ச்சி அடையாமல், தொடர்ந்து போராடியிருக்காங்க. பெண்களுக்கு பொதுவாக 20- 25 வயசு ஆனாவே ஒரு பயம் வந்துரும். அப்படியெல்லாம் இல்லாமல், சரியான கதாபாத்திரம் வரும்போது பிரதிபலிக்க முடியும் என்பதற்கு அவங்க ஒரு உதாரணம் " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement