சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ரோகிணி மனோஜ் பெயரை டாட்டூ குத்திக் கொண்டதை பற்றி மனோஜ் பெருமையாக பேசுகின்றார். விஜயாவும் மனோஜிற்காக ரோகிணி இப்படியெல்லாம் பண்ணுறாரே என்று பரிதாபப்படுகின்றார்.
அதன்பின் முத்துவும் மீனாவும் பரணியின் மகளை வீட்டுக்கு கூட்டி வருகின்றார்கள். இதன்போது அவருடைய அம்மா அவரை அடித்து எதற்காக இப்படி பண்ணினாய் என பேசுகின்றார். அதன் பின்பு முத்துவும் மீனாவும் அவர்களை ஒரு மாதிரி சமாளித்து நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீட்டுக்கு போவோம் என்று சொல்லிவிட்டு செல்லுகின்றார்கள்.
அவர்கள் இருவரும் புறப்பட்டு சென்ற பின்பு அங்கு பிரவுன் மணி வருகின்றார். மேலும் கூடிய சீக்கிரமே கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவோம் என்றும் தனது மருமகனுக்கு தான் தான் கட்டில், பீரோ எல்லாம் வாங்குவேன், நீங்க பொண்ணுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்று கண்டிஷன் போடுகின்றார்.
இதைத்தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வந்த சிந்தாமணி காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருக்கின்றார். விஜயா அங்கு வரவும் அவரை கணக்கெடுக்காமல் இருக்கின்றார் . அதன் பின்பு மீனாவை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது அவள் வளர்ந்து கொண்டே போவாள் என்று விஜயாவுக்கு எதிராக பேசுகின்றார் சிந்தாமணி.
இதனால் நான் எப்படியும் மீனாவை பூ வியாபாரம் பண்ண விடாமல் பண்ணுவேன் அவளை வீட்டில் அடக்கி வைப்பேன் என விஜயா சபதம் எடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!