• Feb 22 2025

இணைந்து இருக்கும் காகம் - கழுகு... ரஜினியுடன் விஜய்யின் குடும்பம்... வைரலாகும் அறிய புகைப்படம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT  உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து மக்களை கவர்ந்துள்ளது.


இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, யோகி பாபு, சினேகா, ஜெயராம் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் வரை நடக்கும் என கூறப்படுகிறது.


நடிகர் விஜய் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மாபெரும் தீவிர ரசிகர் என்பதை நாம் அறிவோம். ரஜினியின் அண்ணாமலை படத்தின் வசனத்தை பேசி தான், தனது தந்தையின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை விஜய் பெற்றார். இதன்பின், தன்னுடைய பல படங்களில் ரஜினியின் ரசிகன் நான் என தன்னை நடிகர் விஜய் அடையாளப்படுத்தி கொண்டார்.


சமீபத்தில் எழுந்த சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து சர்ச்சைக்கு கூட லியோ வெற்றிவிழாவில் விஜய் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் விஜய் தனது தாய், தந்தையுடன் இணைந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். விஜய் சினிமாவில் நடிக்க அறிமுகமான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement