• Jan 18 2025

கமல் எடுத்த அதிரடி முடிவு... பிக் போஸ்க்கு ரெட் கார்ட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. கடந்த ஆறு சீசன்களும் தாண்டி இந்த சீசனில் தான் முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.


பிக் பாஸில் கலந்து கொண்டாள் அதன் மூலம் சினிமாவில் ஜெயித்து விடலாம் என்ற கனவுகளோடு உள்ளே வந்தவர் தான் பிரதீப் ஆண்டனி. ஆனால் அவருக்கு வழங்கபட்டது ரெட்கார்ட்.  போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒரு பக்கம் கமல்தான் ரெட் கார்ட் கொடுத்தார் என்று சொல்ல, கமலஹாசன் ஒரு எபிசோடு முழுக்க நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை என்று நிரூபித்து விட்டு சென்று விட்டார்.


பெண்கள் பாதுகாப்பு என்பது மொத்தமாக இருக்கும் பெண் போட்டியாளர்களை சார்ந்தது இல்லை, மாயா மற்றும் பூரணிமாவை சார்ந்தது என்பது நன்றாக தெரிந்து விட்டது. கமலின் பார்வையில், மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பாதுகாப்பு இல்லை. 


இரு பெண்கள் பெட்ரூம் அறைக்குள் பெட்ஷீட்டை மூடிக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது பிக் பாஸ் அழைத்து அவர்களை மைக்கை போட சொல்கிறார். மறைவான இடத்திற்கு சென்று பேசலாம் என்று பார்த்தாலோ அங்கேயும் நுழைந்து மைக்கை மாற்றுங்கள் என்று சொல்கிறார்.


பிக் பாஸ் வீட்டிற்குள் தனிமனித சுதந்திரம் என்பது எங்கே போனது என்று தெரியவில்லை. இரு பெண்கள் உட்கார்ந்து பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. பெண்களை எப்படி நடத்தும் பிக் பாசிற்கு இந்த வாரம் கமல் ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூட நெட்டிசன்கள் பிரதீப்புடன் ஒப்பீடு செய்து இப்போது பேசி வருகிறார்கள்.

Advertisement

Advertisement