• Dec 04 2023

மழை மழை என் இதயத்தில் அடிக்கிற முதல் மழை- தளதள அழகை காட்டி தவிக்கவிட்ட தர்ஷா குப்தா

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் இளம் நடிகைகளாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் வில்லியாக நடித்து சினிமா துறையில் என்ட்ரி 


அதனை தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீரியலில் நடிகையாக இருந்த தர்ஷா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார். 


குக் வித் கோமாளி, காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமானார். சின்னத்திரை மாஸ்ஸாக வலம் வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். 


இப்படத்தை தொடர்ந்து  சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தர்ஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்த வகையில் தற்பொழுது மழையில் நனைந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement