• Mar 25 2026

அனுஷ்கா எங்கேஜ்மென்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி.? தீயாய் பரவும் புகைப்படத்தின் பின்னணி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துப் பிசியான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவருக்கு தற்போது 44 வயதாகும் நிலையில், இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார். இதனால் இவரைச் சுற்றி பல கிசுகிசு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவர் நடித்த படங்களில் ருத்ரமாதேவி, வேதம், இஞ்சி இடுப்பழகி மற்றும் சிங்கம் தொடர் படங்கள் இவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தன. மேலும் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்திய நடிகையாக அங்கீகாரம் பெற்றார். அதேபோல், இவரது திரையுலக வாழ்க்கையில் அருந்ததி திரைப்படம் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த படத்திற்காக நந்தி விருதும் ஃபிலிம் ஃபேர் விருதும் வென்றார்.

இறுதியாக இவரது நடிப்பில் தாதி திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தாலும், படம் பெரிய வெற்றியை பெறவில்லை.


இதனைத் தொடர்ந்து காத்தனார் என்ற மலையாள படத்தில் நடிக்க உள்ளார். மேலும் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான லாட்டரி கிங் படத்திலும் அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவ்வாறான நிலையில், அனுஷ்கா விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என அவரது தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை அனுஷ்கா செட்டி எங்கேஜ்மென்ட் செய்து கொண்டதாக பரவிய புகைப்படங்கள், அவர் ஏற்கனவே 2016ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற பேஷன் ஷோவில் எடுத்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பழைய புகைப்படங்களே தற்போது தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement