• Jan 19 2025

ஜப்பானில் அமோக வரவேற்பு... 83 வயது ரசிகர் ராஜமௌலிக்கு கொடுத்த சப்ரைஸ்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

ராஜமௌலி ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவர். தெலுங்கில் ஜூனியர் NTR நடிப்பில் STUDENT NO .1 திரைப்படத்தின் ஊடக இயக்குனராக அறிமுகமாகினர். அதனை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் "பாகுபலி" திரைப்படத்தின் ஊடக பெரிதும் பேசப்பட்டார். 


அதனை தொடர்ந்து வந்த "பாகுபலி இரண்டாம் பாகம்" இந்திய அளவில் பெரும் சாதனை படைத்திருந்தது அதுவரையில் இந்தியளவில் அதிக வசூல் செய்த பாலிவுட் திரைப்படமான "தங்கள் யுத்தம்" திரைப்பட சாதனையையும் முறியடித்திருந்தது.


இதையடுத்தே சமீபத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமே RRR ஆகும். இதுவரையில் இந்தியளவில் பேசப்பட்ட ராஜமௌலி இத்திரைப்படத்தின் பின் உலகளவில் பேசப்பட்டது மட்டும் இன்றி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் மாறினார். உலகளவில் பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் கேமரோனே RRR படத்திட்காக  பாராட்டப்பட்டதை தொடர்ந்து" நாட்டுக்கூத்து" பாடல் ஆஸ்கார் விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


அதே வேலை ஜப்பானில் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இருந்த ரஜனியின் "முத்து "பட வசூலை முறியடித்து. ஜப்பானில் பெரும் வரவேட்பை பெற்றிருந்தது  இந்த நிலையில் தற்போது ஜப்பான் சென்றுள்ள ராஜமௌலிக்கு ரசிகர்களால் பெரும் வரவேட்பு கிடைத்துள்ளது அதில் 83 வயதான ஜப்பானிய பெண் "ஜப்பானுக்கு உங்களை வரவேட்கிறோம் ராஜமௌலி. எனக்கு 83 வயதாகிறது ஆனாலும் நான் நாட்டுக்கூத்து பாட்டுக்கு  நடனமாடுகிறேன்"என நெகிழ்ச்சியாக எழுதி அதனை பரிசாகவும்  அளித்துள்ளார் இதனை  தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜமௌலி பகிர்ந்த நிலையில் லைக்கள் அன்லிமிட்டடாக கிடைத்து வருகின்றது. 


Advertisement

Advertisement