• Jul 09 2025

தனது குழந்தை பிறந்த 100வது நாளைக் கொண்டாடிய அழகி..!திடீரென வெளியான அப்டேட்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். தனது சிறப்பான நடிப்புத் திறமையால் சிறு வேடங்களில் ஆரம்பித்து, இன்று ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் அசத்தி வருகின்றார். அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு தற்போது அனைவரையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.


ரோபோ சங்கரின் மகளாக அறிமுகமான இந்திரஜா, கடந்த சில ஆண்டுகளாக மீடியாவிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமீபத்தில் அவர் தாயானார் என்பது பலருக்கும் மகிழ்ச்சியளித்த செய்தியாக இருந்தது. தற்போது அவரது குழந்தைக்கு 100 நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு விழா ஒன்று குடும்பத்தினரால் நடத்தப்பட்டுள்ளது.  


இந்த 100 நாள் விழா, சாதாரணமான குடும்ப நிகழ்வாக இல்லாமல், ஒரு பிரமாண்டமான நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்விற்கான மேடைகள், அலங்காரங்கள், அழைப்பிதழ்கள் என அனைத்தும் ஒரு சினிமா விழாவை நினைவுபடுத்தும் படியாக அமைந்திருந்தது. இந்திரஜாவும் அவரது கணவரும் சேர்ந்து குழந்தையை விழா மேடையில் வைத்துப் போஸ் கொடுத்துள்ளனர். இதைப் பார்த்து அங்கு இருந்த அனைவரும் கைதட்டிப் பாராட்டினார்கள். 


100 நாள் விழாவிற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதுடன், அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவின. பலரும், "குடும்பத்திலுள்ள குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது அருமை," என்று கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.


Advertisement

Advertisement