• Jul 09 2025

விமான நிலையத்தில் ரசிகரை அலட்சியப்படுத்திய அல்லுஅர்ஜுன்..! இணையத்தை பரபரப்பாக்கிய வீடியோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜூன். ‘புஷ்பா’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். அவரது நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களுக்கு பெரும் இன்பமாக அமைந்துள்ளது. எனினும் சமீபத்தில், அவரது நடத்தை தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால் அவர் மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.


ஒரு தனிப்பட்ட சுற்றுப்பயணத்திற்காக அல்லு அர்ஜூன் விமான நிலையத்திற்கு வந்த போது, அவரது ரசிகர்கள் அவரை வரவேற்றிருந்தனர். பாதுகாப்பு அலுவலர்கள் சூழ்ந்து இருந்த போதிலும், அவரை நேரில் காண ஒரு ரசிகர் முயற்சி செய்திருந்தார். அதன் போது அந்த இளைஞர், தனது கைபேசியை எடுத்துக்கொண்டு அல்லு அர்ஜூனுடன் ஒரு செல்பி எடுக்க முனைந்தார்.


பொதுவாக, ரசிகர்களுடன் அன்பாகவும், மதிப்பாகவும் இருப்பவராக அல்லு அர்ஜூன் புகழப்பட்டவர். ஆனால், இம்முறை அவர் செய்த நடவடிக்கை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரசிகர் ஒருவரை தள்ளிவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த இளைஞரை திரும்பிப் பார்க்காமலும் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்ததை அடுத்து சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

Advertisement

Advertisement