• Jan 19 2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் அண்ணாத்தே பட ரீமேக்கா? வெளியான ப்ரோமோ

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுவது என்றால் அது சீரியல் தான். இதன் காரணமாகவே தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பாக்கி வருகின்றன.

அதன்படி விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது பனிவிழும் மலர்வனம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலில் நடிகை வினுஜா தேவி மீண்டும் என்ட்ரி ஆகியுள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக ஈரமான ரோஜா சீசன் 2இல்  நடித்த நடிகர் சித்தார்த் மீண்டும் இந்த சீரியலில் இணைந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பிரபலமான நடிகை வினுஜா, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி இருந்தார். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலும் நடித்துள்ளார். 


தற்போது, பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் ஒரு நகர பெண் மற்றும் பணக்கார நகரத்தில் வசிக்கும் இளைஞன் ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது என்றும், காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இந்த சீரியலின் கதை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பனிவிழும் மலர்வனம் புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வெள்ளை வெட்டி, சட்டை என புதிய கேரக்டரில் காணப்படும் நடிகர் சித்தார்த், தனது 19 வயது தங்கையின் பிறந்த நாளுக்கு கேக் வாங்கி செல்கிறார். 


ஆனாலும் கூட இருக்கும் ரவுடிகள் அண்ணனுக்கு கண்ணு கலங்குது என்று சொல்லுகிறார்கள். இதை வைத்து பார்த்தால் இதில் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து தான் இந்த கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை, இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ரஜினி, கீர்த்தி சுரேஷ் நடித்த அண்ணாத்தே படம் போல இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement