தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை உருவாக்கும் இயக்குநராக பெயர் பெற்றவர் மதிமாறன். இவர் இயக்கிய 'செல்ஃபி' திரைப்படம், வித்தியாசமான கதைக்களம் மற்றும் அழுத்தமான படைப்பு என்பவற்றால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, மதிமாறன் அடுத்ததாக யாரைத் தேர்வு செய்கின்றார் என்பதில் அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர்.
இப்போது உறுதி செய்யப்பட்ட தகவலின்படி, மதிமாறன் தனது புதிய இயக்கத்தில் சூரியை கதாநாயகனாக எடுத்துக் கொண்டு படம் இயக்க இருக்கின்றார். மேலும், இப்படத்தை தயாரிக்கும் பெரும் பொறுப்பை எல்ரெட் குமாரின் தயாரிப்பு நிறுவனம் மேற்கொள்கின்றது.
நகைச்சுவை நடிகராக பிரபலமான சூரி, சமீபத்தில் 'வெற்றிகரமான கதாநாயகன்' என்ற புதிய அடையாளத்தை பெற்றுள்ளார். "விடுதலை" படத்தின் மூலம் சூரி தனக்கென ஒரு தனிச்சிறப்பான இடத்தை உருவாக்கியுள்ளார். காமெடியனாக மட்டுமின்றி, ஒரு உணர்வுப்பூர்வ கதாநாயகனாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
இப்பொழுது அந்த வெற்றியின் தாக்கத்தைத் தொடர்ந்து மதிமாறன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. சூரி நடிக்கும் மதிமாறன் இயக்கும் படம் பற்றி கடந்த சில மாதங்களாகவே கருத்துக்கள் வந்துகொண்டிருந்தன. அந்தவகையில் தற்பொழுது இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் படி ஏப்ரல் 13ம் திகதி இப்படத்தின் பெரும் பூஜை விழா நடைபெறவிருப்பதாக படக்குழு கூறியுள்ளனர். சென்னை நகரில் நடாத்தப்படும் இந்த பூஜை விழாவில் படக்குழுவினர், முக்கிய பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!