• Mar 15 2025

வீட்டை விட்டு வெளியேறும் இனியா...! செல்வியின் வருகையால் உருவாகும் புதுப் பிரச்சனை..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா பாக்கியாட நீங்க யாரு கூடயும் சண்டபிடிக்காதீங்க நான் இங்க இருக்கிறது பிடிக்கலயா சொல்லுங்க நான் வீட்ட விட்டு எங்கயாவது போயிடுறேன் என்கிறாள். இதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பிறகு எழிலுக்கும் யாரும் என்னால சண்டபிடிக்க வேணாம் என்று சொல்லுறாள். அதைத் தொடர்ந்து செல்வி பாக்கியா வீட்ட வந்து நிக்கிறாள்.

அதைப் பார்த்த ஈஸ்வரி உனக்கு என்ன தைரியம் இருந்தா என் வீட்டு வாசல் படியை மிதிப்ப என்று கேக்கிறார். பின் செழியனும் முதல்ல எங்கயிருந்து போங்க என்று சொல்லுறான். அதுக்கு செல்வி நான் உங்க யாரையும் பாத்துப் பேச வரல அக்காவப் பாத்து பேச வந்தேன் என்கிறாள். பின் பேச வேண்டியத பேசிட்டு போய்கிட்டே இருக்கேன் என்கிறாள்.


அதுக்கு ஈஸ்வரி உன்கிட்ட பேசுறதுக்கு யாருமே தயாரா இல்ல என்கிறாள். பிறகு செல்வி அம்மா உங்ககிட்ட பதிலுக்கு பதில் பேசுற நிலமையில நான் இல்ல என்கிறாள். அதைத் தொடர்ந்து என் நகையை பாக்கியா அக்காட கொடுத்து வச்சேன் அத வாங்கத் தான் வந்தேன் என்கிறாள்.

பிறகு ஈஸ்வரி செல்விய பேசிக்கொண்டிருக்காள். அதைக் கேட்ட செல்வி அம்மா போதும் என்பிள்ளைக்கு நீங்க செய்த வரைக்கும் போதும் என்கிறாள். பின் கோபியும் செல்விய பாத்தாலே கோவம் கோவமா வருது  அவள அங்காள போகச்சொல்லுங்க என்கிறான். பிறகு பாக்கியா இனியாவையும் பாக்கியாவுக்காகவும் தான் எல்லாத்தயும் பெருசாக்காமல் இருக்கேன் என்கிறாள். இதைத் தொடர்ந்து பாக்கியாவும் கோபியும் இருந்து கதைக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement