• Mar 15 2025

அவுத்துப் போட்டா படவாய்ப்புக் கிடைக்குமா...? வைரலான சிவாங்கியின் பதில்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

வேடிக்கை மற்றும் நகைச்சுவை கலந்த குரலால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் சிவாங்கி. ‘சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமான இவர்  பின்னர் விஜய் டீவியின் ‘குக் வித் கோமாளி’ மூலம் மக்களின் மனங்களில் புகுந்து புகழின் உச்சியைத் தொட்டார். அவரது எளிமை மற்றும் நேர்மையான பேச்சுகள் போன்றவை ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன.

சமீபத்தில் சிவாங்கி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்ட ஒரு கருத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒரு கேள்விக்கு அவர் கொடுத்த பதில் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.


சமீபத்தில் ஒரு நேர்காணலில் சிவாங்கி, தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதைப் பற்றிய விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார். "நான் புகைப்படங்களை பகிர்வது பட வாய்ப்புகளை பெறுவதற்காக இல்லை. அதேசமயம், 'பட வாய்ப்புக்காக உடம்பைக் காட்டுகிறேன்' என்றும்  கூற முடியாது என்றார். மேலும் அவுத்துப் போட்டா படவாய்ப்புக் கிடைக்குமா? என்றும் கூறியுள்ளார்.

சிவாங்கியின் இந்த தைரியமான பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர், "தன்னம்பிக்கையோடு பேசும் உங்களைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது!" என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனையவர்கள், "இதனால் மீண்டும் விமர்சனங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது!" எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement