• Jul 14 2026

பட்டன் அழுத்தினால் பணம் கொட்டும் மெஷின்? ‘கான் சிட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அர்ஜுன் தாஸ் தற்போது புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள கான் சிட்டி படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளார்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கான் சிட்டி’ படத்தின் கதைக்களமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் சூழலில், அவரது கையில் ஒரு மர்மமான இயந்திரம் கிடைக்கிறது. 


அந்த இயந்திரத்தில் பட்டனை அழுத்தினால் பணம் கொட்டத் தொடங்குகிறது. இதனால் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? அந்த பணம் குடும்பத்தில் என்னென்ன பிரச்சனைகளை உருவாக்குகிறது? என்பதையே படத்தின் மையக்கதையாக அமைத்துள்ளனர்.

ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்நிலையில், ‘கான் சிட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் திரைப்படம் வரும் ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

புதுமையான கதை, குடும்ப உணர்வுகள் மற்றும் காமெடி கலந்த இந்த படம் ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement