நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றிருந்தது.
வழக்கறிஞரான கயல்விழி, திருமணத்திற்குப் பிறகு அரசியல் நிகழ்வுகளில் அதிகமாக ஈடுபடாமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக சீமானுடன் இணைந்து பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களில் அவர் தீவிரமாக செயல்பட்டது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் வெளியாகியதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளதால், அவர்களது குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், கட்சியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து சீமானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Listen News!