• Jan 20 2025

இலங்கையில் உருவாக்கப்பட்ட கோட் திரைப்படத்தின் முக்கிய காட்சி! இணையத்தில் படுவைரல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. சுமார் 5000 திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம் தற்போது வரையில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், லைலா, சினேகா, ஜோகி பாபு, மோகன் ஆகியோரும் சிறப்பு கேரக்டரில் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்கள்.

அதிலும் இந்த படத்தில் திரிஷா ஆடிய பாடல் படு பேமஸ் ஆனது. அதுமட்டுமின்றி இரட்டை வேடங்களில் நடித்த விஜய் அப்பா, மகள் என இரண்டு கேரக்டரிலும் சிறப்பாக நடித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது சமூக வலைதள பக்கத்தில் கோட் திரைப்படம் இலங்கையில் உருவாக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

அதன்படி வெங்கட் பிரபு தனது பட குழுவினருடன் மற்றும் குட்டி விஜய்யாக நடித்த அகில் ஆகியோர் அதில் காணப்படுகின்றார்கள். தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement