• Jan 20 2025

தளபதி 69 படத்தில் இணையவுள்ள முக்கிய நடிகை.. வெளியான சூப்பர் அப்டேட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். சர்வதேச அளவில் இரு  நாட்களிலேயே 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இதை தொடர்ந்து தளபதி 69ஆவது படத்தில் நடிக்க உள்ளார். அதன் பின்பு அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து விலக உள்ளார்.  கோட் படத்தில்  விஜய்யை வெங்கட் பிரபு மாஸாக காட்டியுள்ளார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளதோடு இந்த படத்தில் பிரம்மாண்டமாக டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.


தளபதி 69 ஆவது படத்தில் விஜய் ஒரு முழு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளதோடு, இவர் ஒரு நல்ல அரசியல் பேசக் கூடியவர் தான். இதனால் இந்த படம் விஜயின் கேரியரில் ஐகானிக்  படமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

தளபதி 69 ஆவது படத்தில் சமந்தா நடிக்க உள்ளாராம். மேலும் இதற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல்  ஏற்கனவே வெளியாக இருந்தது.

இந்த நிலையில் தளபதி 69 வது படத்தில் சிம்ரன் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்தது போலவே தற்போது இந்த படத்திலும் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement