தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், உலக சினிமா ஆர்வலர்களுக்கும் கொரியன் திரைப்படங்கள் தனி இடத்தை பெற்றுள்ளன. குறிப்பாக, காதல், உணர்ச்சி மற்றும் மனித உறவுகளைப் பற்றிய கதைகள் கொரியன் திரைக்காட்சிகளில் மிகவும் சீரியஸாகவும், உணர்ச்சிகரமாகவும் பிரதிபலிக்கப்படுகின்றன.
சமீபத்தில், இந்த வகைத் திரைப்படங்களில் ஒன்றான “Even If This Love Disappears Tonight” வெளியாகியதும், கவிஞர் வைரமுத்து இதனை பாராட்டியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து அதன்போது, " “ஒரு விபத்தில் கதாநாயகிக்கு நேற்று நடந்தது இன்று மறந்துவிடும். அவள் நினைவின் நீளம் அன்று மட்டும் தான். இப்படி ஒரு கரு கிடைத்தால் நம்மூரில் திரைக்கதை என்ற பெயரில் வந்தவன் போனவன் எல்லாம் வைக்கோல் திணித்திருப்பான். ஆனால் எந்தவொரு செயற்கை சில்மிஷமும் இல்லாமல் இலையில் நகரும் நீர்த்துளி போல இயல்பாய் அசைகிறது கதை. எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. கவிதையை ரசிக்கும் இதயங்களுக்கு இது பிடிக்கும்.” எனக் கூறியுள்ளார்.
இந்த விமர்சனம் படத்தின் தனித்துவத்தையும், கதை சொல்லும் நுட்பத்தையும் உணர்த்துகிறது. கதையின் இயல்பான, உணர்ச்சிகரமான நகர்வு, படத்தை பார்ப்பவர்களுக்கு சிறப்பாக காணப்படுகின்றது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!