விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகிணியின் திருட்டுத்தனங்கள் அத்தனையும் வெட்ட வெளிச்சமான பிறகு பரபரப்பான கதை அம்சத்துடன் நாளாந்தம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சல்மா அருண். தற்போது இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையும், அவருடைய மகன் தான் க்ரிஷ் என்ற உண்மையும் அனைவருக்கும் தெரிய வருகிறது. இதனால் அவரிடம் இருந்து எப்படியாவது மனோஜை பிரித்து விட வேண்டும் என்று விஜயா உறுதியாக இருக்கிறார்.
அதைப்போலவே மனோஜ் தனக்கு டிவோஸ் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் ரோகிணி நீதிமன்றத்தில் முத்து ஏற்பாடு செய்த சாட்சிகளை தவிடு பொடி ஆக்கி, தனக்கு மனோஜ் உடன் சேர்ந்து வாழத்தான் விருப்பம் என்று உறுதியாக இருக்கிறார்.
இதற்கு இடையில், மனோஜ் புதிய பிசினஸை நம்பி மேலதிகமாக கடன் வாங்கியுள்ளார். எனவே இந்த விடயத்தை வைத்து மனோஜை ரோகிணி மடக்குவாரா? அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், விருது விழா வழங்கும் நிகழ்வில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், ரோகிணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மா அருணும் பேசிக்கொண்ட விடயங்கள் தற்போது இணையத்தில் கவர்ந்துள்ளன.
அதாவது, சீரியலில் எதிர் எதிர் கதாபாத்திரங்களாக தெரியும் இவர்கள், உண்மையிலேயே மிகவும் நெருக்கமானவர்களாக நல்ல நண்பர்களாகவும் காணப்படுகின்றனர்.

அதில் ரோகிணி முத்து பற்றி கூறுகையில், வெற்றி வசந்த் தன்னை மம்மி என்றுதான் அழைப்பதாகவும், இவனால் தான் பல இடங்களில் அசிங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். பொது வெளியில் கூட என்னை மம்மி என்று கூப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
அதற்கு மொக்கையாக காரணத்தையும் வைத்துள்ளார் வெற்றி வசந்த். அதாவது, “நான் எனது கணவரை டாடி என்று அழைப்பேன். சீரியலில் என்னை பாலர் அம்மா என்று தான் முத்து சொல்லுவார். அதை ஆங்கிலத்தில் மம்மி என்று கூறுவதாக என்னை கூப்பிடுகிறார்.”
மேலும், வெற்றி வசந்த்தின் மனைவி வைஷ்ணவி எனக்கு ஆரம்பத்தில் நல்ல நண்பராக காணப்பட்டார். தற்போது நாங்கள் ஃபேமிலி பிரண்டாக எங்களுடைய பயணத்தை தொடர்கின்றோம் என ரொம்ப மகிழ்ச்சியாக தெரிவித்து இருந்தார்.
Listen News!