• Apr 14 2026

ஒரு சான்ஸ் வாழ்க்கையையே மாற்றும்.! இளைஞர்களுக்காக அதிரடி மெசேஜ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையை அதிகமாகக் கவர்ந்த இயக்குநர்-நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அவர் பகிர்ந்த ஒரு வாழ்க்கை அனுபவ கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


அதாவது, “என்னோட வாழ்க்கைல நான் கத்துக்கிட்டது ஒண்ணு தான். நமக்கு ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாம கேக்கணும்.. கூச்சப்படாம கேட்டு, ‘நோ’ அப்படினு பதில் வந்தா, எதுவும் ஆக போறது இல்ல. ஆனா நாம கேட்டு, நடக்குறதுக்கு ஒரு சான்ஸ் இருக்குல.. அதான் முக்கியம்.” என்று கூறியுள்ளார். 

இந்த வார்த்தைகள் மூலம் வாழ்க்கையின் முக்கியமான மனநிலையை மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இன்று தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருப்பது பலருக்கும் ஒரு ஊக்கமாக உள்ளது.

பேட்டியில் அவர் கூறிய இந்த கருத்து வெறும் வார்த்தைகளாக அல்ல; அது அவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து வந்த உண்மையாகவே திகழ்கின்றது. 

Advertisement

Advertisement