அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற சமீபத்திய பட்டிமன்றத்தில், இந்தியாவின் முன்னணி பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா முக்கிய விருந்தினர் ஆக கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்ச்சி தொடர்பாக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் மற்றும் விமர்சனங்கள் திரையுலகையும், பொதுமக்களையும் பரபரப்பாக்கியுள்ளன.
அந்தச் சம்பவம் சம்பந்தமாக, சில செய்திகளில் சாதி குறித்து கேள்வி கேட்டார் எனவும், இதனால் நிகழ்ச்சியில் உணவு வழங்கிய தமிழர்கள் மனம் வருந்தியதாகவும் கூறி உள்ளன. இது பல சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்தது.

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா அமெரிக்கா சென்றுள்ளார். அவரை அங்கு அமெரிக்க தமிழ் சங்கம் அழைத்தது. பட்டிமன்றம் வாயிலாக, அமெரிக்காவில் வாழும் தமிழ் சமூகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு கலந்துரையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில், அவருக்கும் அவரது சக பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலின் போது, பேச்சாளர் ராஜா சாதி குறித்த கேள்வி எழுப்பியதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்ட தகவல்கள் பிரசாரம் செய்யப்பட்டது. இதனால் சிலர் அவரை கண்டித்து இருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் பரவிய கருத்துக்களைப் பார்த்து, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நேரடியாக வீடியோ மூலம் விளக்கம் அளித்தார். அவர் அதன்போது , “பெண்ணின் சாதி பெயரை நான் கேட்கவில்லை. செட்டிநாட்டு சமையலை வைத்து, ‘சொந்த ஊர் செட்டிநாடா?’ என்று கேள்வி கேட்டேன். நான் தமிழ்ச்சாதி என்பதை மட்டுமே பெருமையாக கருதுபவன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பரப்பப்பட்டுள்ளன.” என்றார்.
இந்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதும், சிலர் அவரது பதிலை நன்றாக ஏற்றுக்கொண்டனர்.
Listen News!