சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி வீட்டிற்கு மீனா பூ வைக்க வரும்போது, மீனாவால் தான் தனக்கு பெயரும் புகழும் பாராட்டும் கிடைத்ததாக பார்வதி கூறுகின்றார். அந்த நேரத்தில் பார்வதிக்கு அவார்டு கொடுப்பதாக கூறி இருவர் வருகின்றனர்.
விஜயாவும் அங்கு வந்து, கதை சொல்வதற்கெல்லாம் அவார்டு கொடுப்பார்களா? என்று கிண்டலாக கேட்கின்றார். ஆனாலும் அவர் அடுத்த ஜெனரேஷன்க்கு நல்ல கதைகளை கூறுகின்றார். இதுவும் ஒரு சோசியல் சேவிஸ் தானே என்று சொல்லி அவர் வாயை அடைகின்றனர்.
அதற்கு பின்பு அங்கு வந்த சிந்தாமணியிடம் மனோஜ்காக கடன் கேட்கின்றார் விஜயா. ஆனால் அவர் பணம் கிடைக்கும் ஆனால் அதற்கு வீட்டு பத்திரம் வேண்டும் என்று சொல்லுகிறார். அதில் எனது கணவரின் கையெழுத்து வேண்டும் என்று விஜயா சொல்ல, போன முறை மனோஜ் தானே அதையும் போட்டுக் கொடுத்தார் என்று சிந்தாமணி பாயிண்டை எடுத்துக் கொடுக்கின்றார்.

இன்னொரு பக்கம் மனோஜின் ஷோரூம் பக்கம் ரோகிணி செல்ல, இனி உனக்கும் எனக்கும் எந்த டீலிங்கும் இல்லை நான் அந்த டீலிங்கை கேன்சல் பண்ணுகின்றேன் என்று மனோஜ் சொல்லுகின்றார். ஆனாலும் என்னதான் இருந்தாலும் நீ தான் என்னுடைய கணவர், நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சவால் விட்டு செல்கிறார் ரோகிணி.
அதற்குப் பின்பு அங்கு வந்த விஜயா, பணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டேன். ஆனால் வீட்டு பாத்திரத்தை அடகு வைக்க வேண்டும். அதற்கு அப்பாவின் கையெழுத்து வேண்டும் என்று சொல்ல, போன முறை நான்தானே கையெழுத்து போட்டேன் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறுகின்றார் மனோஜ்.
ஆனாலும் இது எல்லாமே உனக்காக தான் பண்ணுறேன். நீ அசிங்கப்படுவதை என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது நீ தான் இந்த வீட்டு பாத்திரத்தையும் மீட்டு எடுக்க வேண்டும் என்று விஜயா கலங்கி பேசுகின்றார்.
இறுதியாக ரவி ஸ்ருதியிடம் வந்து தனக்கு என்ன செலரி என்று கேட்கின்றார். மேலும் தனக்கு 60 ஆயிரம் செலரி வேண்டும் என்றும் பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரத்தில் நீத்து கால் பண்ணி ஃபுட் ஆர்டர் பண்ணுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!