பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பழனி கோமதியைப் பார்த்து மச்சான் உன்கூட கதைக்கிறாரா என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் அப்பாவால எல்லாம் உன்கூட பேசாமல் இருக்க முடியாது என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து கோமதி சரவணனைப் பார்த்து இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணுமே வக்கீல் ஏதாவது உன்கிட்ட பேசினாரா என்று கேட்கிறார்.
அதுக்கு சரவணன் 10 மணிக்கு கோர்ட்டில நிக்கணும் என்று சொன்னாரு என்கிறார். அதைக் கேட்ட கோமதி இந்த கோர்ட்டு பயணம் எப்பதான் ஒரு முடிவுக்கு வரப்போகுதோ தெரியல என்கிறார். மேலும், நீ பேசாமல் காதலிச்சுக் கல்யாணம் செய்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது என்கிறார் கோமதி. அதனைத் தொடர்ந்து, பழனி அவன் காதலிச்சவன் தானே நீங்க தானே அவனை புரிஞ்சு கொள்ளேல என்கிறார்.

பின் பாண்டியன் பழனியைப் பார்த்து இண்டைக்கு நீ கொஞ்சம் சரவணன் கூட கோர்ட்டுக்குப் போய்ட்டு வருவியா என்று கேட்கிறார். அதைக் கேட்ட கோமதி அண்ணனுங்க இதைக் கேட்டாலே சண்டைக்கு வந்திருவாங்க என்று சொல்லுறார். அதுக்கு பழனி அதை நான் சமாளிச்சிருவேன் என்கிறார். பின் கோமதி தான் சரவணன் கூட கோர்ட்டுக்குப் போய்ட்டு வாறன் என்கிறார்.
மறுபக்கம், ராஜிஜும் கதிரும் ஊருக்கு போறதுக்கு கிளம்புறார்கள். அப்ப கதிர் ராஜியைப் பார்த்து இனி அண்ணாவோட வாழ்க்கையில என்ன நடக்கப் போகுது என்று கேட்கிறார். பின் கதிர் ராஜி கிட்ட நாம இனி சந்தோசமா இருப்போம் என்கிறார். அதைத் தொடர்ந்து கோர்ட்டுக்குப் போன சரவணன் மயில் கூட இனிமேல் வாழ முடியாது என்கிறார். இது தான் இன்றைய எபிசொட்.
Listen News!