தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முக்கிய வில்லன் நடிகராக அறியப்பட்டவர் நடிகர் பொன்னம்பலம். இவர் ரசிகர்களிடையே கபாலி என்ற பெயராலும் பிரபலமாக உள்ளார். இவரது வில்லத்தனமான நடிப்பு அவருக்கென மக்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை உருவாக்கியது.
சமீபத்தில் பொன்னம்பலம் உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வருவதாக, அவரைச் சுற்றிய ஒரு சில அவதூறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
குறிப்பாக, அவர் வீல் சேரில் அமர்ந்த நிலையில் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதன் பின்னர், அவருக்கு என்ன ஆனது? உடல்நிலை சரியில்லை என்று கூறியவர் இப்போது இன்னும் மோசமாகிவிட்டாரா? என பேச ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பில் நடிகர் பொன்னம்பலம் கூறுகையில், என் அக்கா மறைந்த சோகத்திலும், உடல்நிலையால் ஏற்பட்ட மன அழுத்தத்திலும், நான் வீல் சேரில் அமர்ந்து நடனமாடினேன். சிலர் அதை பார்த்து பல கதைகளை கட்டிவிடுகிறார்கள்.
நான் படப்பிடிப்புத் தளத்தில் மது அருந்துவேன் என்று கூறுகிறார்கள். அதனை ஆதாரமோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் சிலர் ஏதேனும் பேசவே வேண்டும் என்பதால் பேசுகிறார்கள். வெளியில் பேசும் கதைகளை எல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை என தெரிவித்துள்ளார்.
Listen News!