• Sep 10 2024

தலையில் கை வைத்து சோகமாக வெங்கட் பிரபு - விஷ்ணுவர்தன்..! இவங்க தொல்லை தாங்க முடியலை - யுவன்

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் விஷ்ணுவர்தன் ஆகிய இருவரும் தலையில் கை வைத்து யுவன் சங்கர் ராஜாவின் அலுவலகத்தில் சோகமாக உக்காந்திருக்கும் நிலையில் ’இவங்க தொல்லை தாங்க முடியல’ என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படத்தை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரை உலகின் பிசியான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்சங்கர் ராஜா என்பதும் பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விஜய்யின் ‘கோட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவித்துவிட்ட நிலையில் அந்த பாடலை வாங்குவதற்காக வெங்கட் பிரபு அவரது அலுவலகத்தில் சென்று காத்திருப்பது போன்றும், அதேபோல் ’நேசிப்பாயா’ என்ற படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜாவுடன் பாடல் வாங்க காத்திருப்பதாகவும் இருவரும் ஏமாற்றத்துடன் தலையில் கை வைத்து உட்கார்ந்திருப்பது போன்றும் புகைப்படத்தை யுவன் சங்கர் ராஜா பதிவு செய்துள்ளார்.

அப்போது யுவன் சங்கர் ராஜா ஜாலியாக போன் பேசிக் கொண்டே இருப்பது போன்றும் ’இவங்க தொல்லை தாங்க முடியல’ என்றும் காமெடியாக பதிவு செய்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement