• Aug 18 2025

20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கும் யுவன்! அதிரடியாக அளிக்கப்பட்ட போலீஸ் புகார்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அந்தஸ்தோடு மட்டுமில்லாமல் சிறந்த பாடகராகவும் திகழ்பவர் தான் யுவன் சங்கர் ராஜா. 

விஜய் நடிப்பில் உருவாகும் கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஒரு பெரிய வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றார். அவர் கடந்த  இரண்டு வருடங்களுக்கு மேலாக வாடகை செலுத்தவில்லை என அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கும் யுவன் அந்த பணத்தை தர மறுப்பதாகவும் தற்போது எந்த தகவலும் சொல்லாமல் வீட்டை காலி செய்வதாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகவல் கொடுத்துள்ளார்கள். இதன் காரணத்தினால் அந்த வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் போலீசாரால்  விசாரிக்கப்பட்டு வருவதோடு யுவன் தரப்பில் என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement