• Sep 20 2024

அது மட்டும் நடந்தால் ரெக்கார்ட் பிரேக்கிங் பண்ணுவோம்! கோட் பற்றி அர்ச்சனா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய திரைப்படம் தான் மங்காத்தா. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாகவே தற்போது வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கிய கோட் படம்  மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதுவரை கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியானது. ஆனாலும் அத்தனை பாடல்களும் படு விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் காரணத்தினாலே இந்த படத்தின் டிரைலர் என்ன ஆகுமோ என்ற அச்சம் காணப்பட்டது. ஆனாலும் அவை எல்லாவற்றையும் முறையடிக்கும் விதமாக கோட் படத்தின் டிரைலர் காணப்பட்டது.

குறித்த டெய்லரில் எல்லா நடிகர்களையும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளதோடு அதில் விஜய் பல தோற்றத்தில் காணப்படுகின்றமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


இந்த நிலையில், கோட் திரைப்படம் கிட்டதட்ட 6 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகின்றதாகவும் அப்படி மட்டும் நடந்து விட்டால் ரெக்கார்ட் பிரேக்கிங் ஆக இருக்கும் எனவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இது விஜய் சார் கூட எங்களுக்கு இரண்டாவது படம் எங்களுடைய 25 படமாகவும் இது அமைந்ததுல ரொம்ப சந்தோஷம். டெக்னிக்கலா ரொம்பவே சவாலான படம். ஆனா இதுவரை நாங்கள் பண்ணின படங்களிலேயே ட்ரெஸ்ட்  இல்லாமல் வேலை பார்த்த படம் இதுதான் . விஜய் சார் படங்களிலேயே அதிக வெளிநாட்டு லொகேஷன்களை சூட் பண்ணிய படமும் இதுவாகத்தான் இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement