• Jan 18 2025

அடக்கம் செய்ய எடுத்த செல்லப்படவுள்ள பவதாரணியின் உடல்... கடைசி ஒருமுறை அக்காவை பார்க்க கண்ணீர் மல்க வந்த யுவன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் இளையராஜா அவர்களின் மகள் பாடகி பவதாரணியின் உடல் அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் இருக்க கூடிய அவரது பண்ணை வீட்டில்  உறவினர் ,மக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. 


அங்கே கார்த்தி ராஜா யுவன் , சங்கர் ராஜா ஆகியோர் இருக்கின்றனர். இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. அதன் பிறகு குடும்ப சடங்குகள் செய்யப்பட்டு இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் கல்லறை உள்ள இடத்தின் அருகிலே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


இந்நிலையில் தனது தங்கையை இறுதியாக ஒருமுறை பார்க்க கண்ணீர் மல்க வந்து நின்ற யுவன் சங்கர் ராஜா. கண்களில் வரும் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதபடி துடைத்து கொண்டே வந்து பார்க்கிறார். இந்நிலையில் பல பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். பவதாரனின் உறவினர்கள் கத்தி கதறி அழுதுகொண்டு இருக்கின்றனர். தற்போது அவரின் உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து செல்லப்படவுள்ளது.   

Advertisement

Advertisement