• May 20 2026

விஜயை பார்க்க முண்டி அடித்துக் கொண்டு சென்ற இளைஞர்கள்..! பலருக்கு காயம்.

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் இன்று தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொண்டார்.

அவரது வருகையை முன்னிட்டு திரண்டிருந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் சில இளைஞர்கள் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும், விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் திரண்டிருந்த சிலர், கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தள்ளி உடைத்து முன்னேறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முந்தியடித்து செல்லும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜயின் ஒவ்வொரு பிரச்சார பயணத்திலும் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இந்த சம்பவமும் அதற்கு மேலதிக கவனம் ஈர்த்துள்ளது.


 

Advertisement

Advertisement