• May 20 2026

சேலை லுக்கில் ரசிகர்களை கவர்ந்த கோமதி பிரியாவின் போட்டோஷூட்.!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகைகோமதி பிரியா.

சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள அவர், தனது இயல்பான நடிப்பால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழித் தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வரும் கோமதி பிரியா, பல மொழிகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

மிகவும் எளிமையான அலங்காரம் மற்றும் பாரம்பரிய சேலை லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் பலரும் அவரது புதிய தோற்றத்தை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியாவின் இந்த புதிய போட்டோஷூட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Advertisement

Advertisement