• May 20 2026

சிகரெட்டை தொட்டதே இல்ல.. பெருமைக்கு கிடையாது; இதுதான் உண்மை.! நடிகர் சதீஷ் ஓபன்டாக்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள சதீஷ் சமீபத்தில் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது நடிப்பில் உருவாகியுள்ள "முஸ்தபா முஸ்தபா" திரைப்படத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சதீஷ், தனது வாழ்க்கை முறையைப் பற்றி திறந்த மனதுடன் பகிர்ந்தார்.


அதாவது, “நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்கு சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு, நான்கு பேர் குடிப்பதை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்.” என்று கூறியுள்ளார். 

இந்த எளிய மற்றும் நேர்மையான கருத்துக்கள் நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே கைதட்டல்களை பெற்றதுடன், பின்னர் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

திரைப்பட உலகில் இருக்கும் பலரும் தங்கள் வாழ்க்கை முறைகள் குறித்து திறந்தவெளியில் பேசுவதில்லை. ஆனால் சதீஷ் தனது அனுபவத்தை எளிமையாக பகிர்ந்திருப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் இத்திரைப்படம் வருகின்ற 6ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement