தற்போது வளர்ந்து வரும் நடிகைகளாக மமிதா பைஜூ மற்றும் கஜாடு லோகர் இருவரும் காணப்படுகின்றனர். இவர்கள் இருவரும் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டாகி வருகின்றனர். மமிதா பைஜூ தற்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகின்றார். இதன் காரணமாக பிரேமலு 2 படத்தினை ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் திரைப்படத்தை பிரபு தேவா இயக்கவுள்ளார். மேலும் இப் படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இப் படத்தில் ஷங்கர் மகனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு இளம் நடிகை ஒருவருடன் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்துள்ளது.
பேச்சு வார்த்தைகளின் பின்னர் படத்தில் நடிப்பதற்கு நடிகை மமிதா பைஜூ ஓகே சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது தொடர் படங்களின் வரிசையில் ஷங்கர் மகனின் படமும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!