• Oct 09 2024

நீ கரெக்ட் கிடையாது.. நீ தான் தப்பு..! மாயாவை வெளுத்து வாங்கிய பூர்ணிமா! அதிர்ச்சியில் மாயா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

அதன்படி, நேற்றைய நிகழ்ச்சியில' மாயா தன் உயிர்நண்பி என்று கூறிக்கொண்டு தனது நண்பி செய்யும் தவறை கண்டிக்காமல் தவறுக்கு ஊக்கம் கொடுத்தது எந்த வகையான நட்பு என்று எனக்கு தெரியவில்லை' என கமல் முன்னிலையில் பூர்ணிமாவை பார்த்து விசித்ரா கேட்டிருந்தார்.


இந்த நிலையில் தற்போது மாயாவின்  தவறுகளை உணர ஆரம்பித்து விட்டார் பூர்ணிமா..அதன்படி, தன் தலைமையில் சரியாக இருந்த பிக் பாஸ் இல்லம் தற்போது மாயாவின் கேப்டன்ஷிப்பில் தான் தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கத் தொடக்கி விட்டார்.

மேலும் பூர்ணிமா அழுது கொண்டே ' எனக்கு குழப்பமா இருக்கு. ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்துட்டன். என்று கூற 'நீ அழும் போது கூட  அழகாக இருக்கா, நான் இருக்கன், கவல படாத' என்று மாயா ஆறுதல் கூறுகிறார்.

இதை தொடர்ந்து பூர்ணிமாவோ, 'தப்பு பண்ணினது நீ தான்இ உன்னை யாரும்  கேள்வி கேட்கல..  அதுக்காக நீ கரெக்ட் கிடையாது' என சொல்ல அதிர்ச்சி அடைகிறார் மாயா. 

ஆக மொத்தத்தில் பிக் பாஸ் வீட்டில் உயிர் தோழிகளாக இருந்த மாயா மற்றும் பூர்ணிமா இடையே சண்டை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. இனி பொறுத்திருந்து பார்ப்போம் எப்போது பற்றி எரியும் என...


Advertisement