• Oct 09 2024

'நமக்கு இதுதான் தலை தீபாவளி' பிக்பாஸ் வீட்டில் தொடரும் காதல் அலப்பறைகள்! இருந்தாலும் மணி டீசண்ட் தான்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டுள்ளது. தற்போது தீபாவளி என்பதால் அனைவரும் உற்சாகமாக இருப்பதை நாம் காணலாம்.இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மணி சந்திரா, ரவீனாவிடம் தனக்கு தல தீபாவளி என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக வளம் வரும் மணி, ரவீனா இருவரும் மேக்கப் செய்யும் அறைக்குள் இருக்கும் போதே, 'நமக்கு இதுதான் தலை தீபாவளி' என்று கூறுகிறார் மணி.


'அப்போது கல்யாணம் ஆனவங்களுக்கு தான் தல தீபாவளி, மத்தவங்களுக்கு எல்லாம் வெறும் தீபாவளி தான்' என்று ரவீனா கூற, 'அதெல்லாம் ரூல்ஸ் பாலோ பண்றவங்களுக்கு தான், நமக்கு இதுதான் தலை தீபாவளி' என்று மணி சந்திரா கூற ரவீனா சிரிக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 

இதேவேளை, நிக்சன் போல் இல்லாமல் மணி தனது காதலியாக இருந்தாலும் ரவீனாவிடம் டீசண்டாக நடந்து கொள்கிறார் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement