• Apr 14 2026

ஓடிடியிலும் இமாலய வெற்றியை பதிவு செய்த "துரந்தர்".. வெளியான அதகள அப்டேட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா வரலாற்றில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று ‘துரந்தர்’. நடிகர் ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை, இயக்குநர் ஆதித்யா தார் இயக்கியிருந்தார். வெளியான நாளிலிருந்தே இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, பான் இந்திய மொழிகளில் வெளியாகாமல் ஹிந்தியில் மட்டும் திரைக்கு வந்து, உலகம் முழுவதும் ரூ.1300 கோடிகளைத் தாண்டி வசூலித்தது என்பது இந்திய திரைத்துறையையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது சமீப காலங்களில் ஹிந்தி சினிமா சாதித்துள்ள மிகப்பெரிய இமாலய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


தற்போது பெரிய படங்கள் பான் இந்திய அளவில், பல மொழிகளில் வெளியிடப்படுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால், ‘துரந்தர்’ இந்த வழக்கத்திற்கு மாறாக, ஹிந்தியில் மட்டும் வெளியாகி, உலக அளவில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது.

இளம் நடிகை சாரா அர்ஜுன், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறைந்த வயதிலேயே ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்நிலையில், திரையரங்குகளில் சாதனை வெற்றியைப் பெற்ற ‘துரந்தர்’, 2026 ஜனவரி 30-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்களுக்கு, ஓடிடி வெளியீடு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஓடிடியில் வெளியான உடனேயே, இப்படம் இந்திய அளவில் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன. 

Advertisement

Advertisement