• Apr 14 2026

யோகி பாபு ஹீரோவாக நடித்த ‘கெணத்த காணோம்’.. டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கும் யோகி பாபு, ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

அதன்படி, அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கெணத்த காணோம்’ விரைவில் வெளியாகவுள்ளது. இத படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க, பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படத்தை மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். 

ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற அவர், இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும் நேரத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவருடன் பணியாற்றிய குழுவினர் இணைந்து படத்தின் பணிகளை நிறைவு செய்துள்ளனர்.


இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், ‘கெணத்த காணோம்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், நடிகர் கார்த்தி இந்த டிரெய்லரை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement