• Apr 14 2026

சரஸ்வதி படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்..ரிலீஸ் எப்போ தெரியுமா.?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின்பு, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்கார், சத்யா, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. 

தற்போது வரலட்சுமி தனது சகோதரி பூஜாவுடன் இணைந்து ‘தோசா டைரீஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படமாக ‘சரஸ்வதி’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வரலட்சுமி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.


இந்த நிலையில், ‘சரஸ்வதி’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


Advertisement

Advertisement