• Apr 14 2026

பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் ராதிகா! 'தாய் கிழவி' படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் தான் 'தாய் கிழவி'. குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். புதிய இயக்குநரான சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் படமாக இருந்தாலும், அவர் இந்த திரைப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளதாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.


இத்திரைப்படத்தில் பல திறமையான நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். அவருடன் இணைந்து முனிஸ்காந்த் , அருள்தாஸ் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நட்சத்திர பட்டியல் மற்றும் உணர்ச்சி மிக்க கதைக்களம் காரணமாக படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளரான நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். 

திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல திரையரங்குகளில் படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இத்திரைப்படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ.56.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement