• Apr 14 2026

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு வந்த புது சிக்கல்.! அமேசான் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு பல வெற்றி படங்களை இயக்கிய அவர், இந்த படத்தையும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைந்து நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திரைப்படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

முன்னதாக இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் சில தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகவில்லை.

இதனால் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது வரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மற்றொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படத்தின் ஓடிடி உரிமம் சுமார் ரூ.120 கோடிக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் படம் வெளியீடு குறித்து உறுதியான தேதி அறிவிக்கப்படாததால், அந்த ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement